
சோழிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்றம்பாக்கம் காலனியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சினேகா தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தற்போது சினேகா இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சினேகாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் உறவினர்கள் சினேகாவை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கும் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.