குஜராத்தில் 22 வயது இளம்பெண் தனது கணவரை பிரிந்து 4 மாத குழந்தையுடன் வசித்து வந்தார். அப்போது 15 வயது சிறுவனுக்கும் இளம்பண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சிறுவன் இளம் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் நான்கு மாத குழந்தையை தனது பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என பயந்த சிறுவன் அந்த குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி இளம்பெண் வெளியே சென்ற நேரத்தில் சிறுவன் குழந்தையை கொன்றுவிட்டு படுக்கையில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடியுள்ளார். இதனையடுத்து சிறுவன் திடீரென காணாமல் போனதால் சந்தேகம் அடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுவன் நான்கு மாத குழந்தையை கொன்ற நாடகமாடியது தெரியவந்தது. இதனால் போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.