
உத்திரபிரதேச மாநிலத்தில் அம்ரீன் ஜகான் என்ற 23 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பெங்களூருவில் வெல்டராக பணிபுரிந்து வரும் நிலையில் திருமணத்திற்குப் பிறகு தன் கணவரின் தந்தை சாகித் மற்றும் அவரது சகோதரி கதீஜா ஆகியோருடன் அம்ரீன் வசித்து வந்தார். இந்நிலையில் அம்ரீன் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் திடீரென அவருடைய கர்ப்பம் கலைந்து விட்டது. இதனால் மன வேதனையில் இருந்து அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு முன்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, என்னுடைய தவறான உணவு பழக்கவழக்கங்கள் தான் கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் என என்னுடைய மாமனார் மற்றும் கணவரின் சகோதரி ஆகியோர் திட்டிய நிலையில் என் கணவரும் அவர்களுடன் சேர்ந்து என்னை திட்டுகிறார். நீ ஏன் சாகக்கூடாது என என் கணவர் என்னை கேட்ட நிலையில் மருத்துவமனைக்காக உனக்கு செலவழித்த பணம் அனைத்தும் வீண் என்று கூறுகிறார்கள்.
என்னுடைய மரணத்திற்கு என் கணவரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர்தான் காரணம். என் கணவருக்கும் இதில் பாதி பங்கு உண்டு என கூறிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் அம்ரின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன்னுடைய தந்தைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எப்படியாவது தன்னை இந்த குடும்பத்திலிருந்து காப்பாற்றும்படி கூறி கதறி அழுதுள்ளார். ஆனால் அவர் வருவதற்குள் அம்ரீன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக அமீரினின் தந்தை சலீம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.