பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள தாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த விசுவஜித் பாஸ்வான் என்பவருக்கு, ஏப்ரல் 16ம் தேதி, பெரிய பலியாவைச் சேர்ந்த கற்பனா குமாரியுடன், திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மூன்றாம் நாளில், கற்பனா தன் முன்னாள் காதலனை தனது உறவுக்கார மாமாவாக சித்தரித்து, அவரை வீட்டிற்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டினர் அவரை உண்மையிலேயே உறவினரென்று நம்பி, வரவேற்பு அளித்து, மணப்பெண்ணுடன் தனியாக இருக்க அனுமதித்தனர்.

இதற்குப் பிறகு, கணவர் விசுவஜித், திடீரென அறைக்குள் சென்றபோது, கற்பனா மற்றும் நிதீஷ்  உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, இது குறித்து அவரது மாமனாரிடம் தகவல் தெரிவித்தபோது, நிதீஷ் என்றவர் உறவினர் இல்லை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் திருமண உறவை முற்றிலும் குழப்பமாக மாற்றியது. இது பற்றிய விசாரணையின் போது, கற்பனா தன்னுடைய விருப்பமின்றி திருமணம் நடந்ததாகவும், நிதீஷ் தான் உண்மையான காதலர் என்பதையும் ஒப்புக்கொண்டார்.

பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சமாதானம் பேசப்பட்டாலும், கற்பனா தனது காதலனுடன் தான் வாழ்வேன் என்று கூறினார். இறுதியில், போலீசாரின் தலையீட்டின் மூலம், கணவர், மனைவி மற்றும் காதலன் ஆகியோர் தங்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.