அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டிம்பர்லைன் உயர்நிலைப் பள்ளியில் ஒரு அதிர்ச்சியூட்டும் “கௌரவக் கொலை” முயற்சி நடந்துள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுமியின் தாய் ஜஹ்ரா சுபி மொஹ்சின் அலி மற்றும் தந்தை இஹ்சான் அலி. இவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் ஏற்பாடு செய்த திருமணத்தை நிராகரித்ததற்காக தங்கள் 17 வயது மகளின் கழுத்தை நெரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஈராக் செல்லும் விமானத்தில் அழைத்துச் செல்ல பெற்றோர் முயற்சித்ததால் சிறுமி பள்ளிக்கு தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த சிறுமியின் தந்தை அவரது கழுத்தை நெறித்து மூச்சு திணறச் செய்துள்ளார் சக மாணவர்களின் முயற்சியால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் இஹ்சான் கைது செய்யப்பட்டார், தப்பியோடிய தாய் ஜஹ்ரா கனடா எல்லையில் பிடிபட்டார்.

https://twitter.com/i/status/1873139711016907006