ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் 5 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை சந்தித்து பழக துவங்கியுள்ளார். இவர்களது பழக்கம் இன்ஸ்டாகிராம் வழியாக வளர்ந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு விக்னேஷ் அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருவரும் ஒன்றாக தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே அந்தப் பெண் வேறு நபருடன் பேசி பழகுவதாக சந்தேகித்த விக்னேஷ் அவரை கண்டித்துள்ளார். இது இருவருக்கிடையே வாக்குவாதமாக மாறிய நிலையில் தன்னை விரைந்து திருமணம் செய்து கொள்ளுமாறு விக்னேஷிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

விக்னேஷ் அதற்கு தனது பெற்றோரிடம் பேசிவிட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனாலும் அந்த பெண் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால் விரத்தியடைந்த விக்னேஷ் தான் காதலித்த பெண்ணை கொலை செய்ய முடிவு எடுத்தார்.

இது குறித்து விக்னேஷ் தனது நண்பரான ஷாஹித் மற்றும் சாஹித்தின் மனைவி கல்யாணிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் விக்னேஷ்க்கு உதவ மறுத்துள்ளனர். ஆனாலும் மனம் தளராத விக்னேஷ் திருமண ஏற்பாடுகள் செய்து திருமண நாள் அன்று கொலை செய்ய முடிவு எடுத்தார்.

திட்டமிட்டபடி திருமணத்தை முடித்துவிட்டு அன்றைய தினம் மாலை நேரம் அந்தப் பெண்ணின் தலையை சுவற்றில் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். சடலத்தை பார்த்த விக்னேஷின் நண்பர்கள் இருவரும் கொலையை மறைக்க உதவியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.