திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் திருப்பதி கோவிலில் 65 வயது முதியோர் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக காலை 10 மணி, மதியம் மூன்று மணிக்கு இரண்டு இடங்களை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. இதில் சென்று முதியவர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கு எஸ்-1 கவுண்டரில் ஒருவர் புகைப்பட அடையாளத்துடன் கூடிய வயது சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பிறகு தட்சிணமடை தெருவில் நம்பி கோவில் அருகில் உள்ள நுழைவு வாயிலில் பதிவு செய்ய வேண்டும்.