
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் திருச்செந்தூர் ரயில்வே திருச்செந்தூர் இடையில் ரயில் தண்டவாளம் மண் அரிப்பு காரணமாக அரிக்க துவங்கியது. இதனால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயில் பயணிகள் மூன்று நாட்களாக தவித்து வந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டார்கள்.
மேலும் திருச்செந்தூர்- நெல்லை இடையே ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற டிசம்பர் 31ம் தேதி வரை நெல்லையிலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனவும் எழும்பூரில் இருந்து வரும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.