
திமுகவின் ஆதிதிராவிட நல குழுவின் தலைவர் க.சுந்தரம் உடல் நலக்குறைவால் சென்னை மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார். இவர் 1989-ல் திமுகவின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996-2001 திமுகவில் பால்வளத்துறை அமைச்சராகவும், இரண்டு முறை பொன்னேரி தொகுதியில் எம்எல்ஏவாகவும் பணிபுரிந்துள்ளார்.
குறிப்பாக பட்டியல் இன தலைவர்களின் முக்கியமான தலைவராக சுந்தரம் இருந்தது குறிப்பிடத்தக்கது. திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த துணை பொதுச்செயலாளர் ஆகவும் அவர் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவரின் மறைவை திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.