2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது போன்று கட்டமைப்பை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் நிர்வாகிகள் பலர் மாவட்ட செயலாளர் கனவோடு காத்திருக்கின்றனர்.