தமிழகத்தில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் என்பது 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இந்தியா டுடே- சக வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 343 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேர்தல் நடைபெற்றால் கண்டிப்பாக திமுக கூட்டணி வெல்லும். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47 சதவீதம் திமுக கூட்டணி வாக்கு பெற்றிருந்த நிலையில் தற்போது மட்டும் தேர்தல் நடந்தால் 52 சதவீத வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.