
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே இன்று விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தெய்வசிகாமணி என்பவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதை தடுக்க வந்த அவருடைய மகன் மற்றும் மனைவியையும் கொடூரமாக கொலை செய்த அவர்கள், வீடு புகுந்து பின்னர் நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.
சினிமா பாணியில் அரங்கேறிய இந்த படுகொலை திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்-சேமலை கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் வருத்தம் அளிப்பதாகவும் இருக்கிறது.
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயம் இல்லை. இப்படி திமுக ஆட்சியில் தொடர்ந்து குற்றங்கள் அரங்கேறும் நிலையில் இதனை தடுக்க ஒரு ஆட்சி நடக்கிறதா இல்லையா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்க பூமி ஆக மாற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய கடும் கண்டனம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு சட்டம் ஒழுங்கை காக்க இனியாவது செயல்படுமாறு திமுக அரசை வலியுறுத்திக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், “இவற்றை…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 29, 2024