
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் இன்று கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் கண்டிப்பாக அவரின் அரசியல் வருகை தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அவர் திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கே கடும் சவாலாக மாறுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவருகிறது. அதோடு திமுக கட்சியின் தலைவர் பதவி மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதிக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இனிவரும் காலத்தில் தமிழக அரசியல் களத்தில் விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் உதயநிதி வசம் திமுக வந்தால் விஜய் மற்றும் உதயநிதி இடையிடையே நேரடியாக அரசியல் களத்தில் போட்டி ஏற்படும் என்று கூறப்படுகிறது.