தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் இடையே தான் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டி என்று கூறினார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் விஜயின் பேச்சுக்கு அர தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது அமைச்சர் முத்துசாமியும் இது பற்றி பேசியுள்ளார்.

இது தொடர்பாக, ஈரோடு மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வீட்டுவசதி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் முத்துசாமி, திமுகவின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கு குறித்து பேசியுள்ளார். “திமுகவை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது என்பதற்கு, தமிழக வேளாண்மை கூட்டமைப்பின் தலைவர் விஜயின் பேச்சே ஒரு உதாரணம்,” என அவர் குறிப்பிட்டார். இது திமுகவின் அரசியல் தாக்கத்தை உணர்த்துகிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்நாட்டில் அனைத்து தரப்பினரும் திமுகதான் முதன்மை என கருதுகின்றனர். எனவே பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய தேவையே இல்லை,” என்றும் தெரிவித்துள்ளார். திமுக அரசு பொதுமக்கள் நலனில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், எதிர்க்கட்சிகள் செய்திகளை உருவாக்கி மக்கள் மனதில் குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றன என்றும் அமைச்சர் முத்துசாமி குற்றம் சாட்டினார்.