
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர்.
இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய இளைஞரணி மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.