
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது ஏர்போர்ட் வராது என்று உறுதி கொடுத்த விஜய் அதற்கு பதிலாக மாற்று இடத்தில் அதனை அமைத்துக் கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் நடிகர் விஜயின் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதாவது தமிழக வெற்றி கழகத்தின் கட்சித் துண்டினை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து விஜய்க்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் திவ்யா சத்யராஜ் திமுக கட்சியில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இணைந்தார். ஏற்கனவே சத்யராஜ திராவிட கொள்கைகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இப்படி இருக்கையில் அவருடைய மகன் சிபி சத்யராஜ் விஜய்க்கு ஆதரவு கொடுத்தது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது சிபி சத்யராஜ் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.