இந்து மக்கள் நிறுவன கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய்க்கு திமுக அரசு பல்வேறு நிர்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கும். அவர் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார். திமுக அரசு சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அதற்கு நடிகர் விஜய் ஆதரவு கொடுத்துள்ளதை பார்க்கும்போது அவர் திமுகவின் ஊது குழலாக செயல்படுவது போன்று தான் தெரிகிறது.

நீட் தேர்வில் எந்த பிரச்சனையும் கிடையாது. அதன்பிறகு நீட் தேர்வில் இருக்கும் முறை கேடுகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடிகர் விஜய் நேரம் ஒதுக்கினால் நிச்சயம் தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வினால் பயன்பெற்றுள்ளனர் என்பது குறித்து விளக்கம் அளிக்க இந்து மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. நடிகர் விஜயை இன்னொரு எம்ஜிஆர் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் இன்னொரு கமல்ஹாசன் என்பதை நிரூபித்து விட்டார் என்று கூறியுள்ளார்.