
மதுரையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி தான் டங்ஸ்டன் சுரங்கம் வரக்கூடாது என்று போராடினார். முதலமைச்சர் ஸ்டாலின் 10 மாதங்களாக அமைதியாக தான் இருந்தார். இது பற்றி திமுக எம்பிக்கள் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் பொதுமக்களும் தான் இந்த விவகாரத்தில் போராடினார்கள்.
திமுக கூட்டணியை நம்பி செல்லும் கட்சிகள் மக்கள் எதிர்ப்பை பற்றி ஒரு தொகுதியில் கூட வெல்லாது. திமுகவுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் வேங்கை வயல் விவகாரத்தில் திமுக அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை வேண்டுமென்று வலியுறுத்துகிறது. இதன்மூலம் திமுகவினரே இந்த விவகாரத்தில் ஈடுபட்டு இருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது. மேலும் பெரியாரை இழிவாக பேசிய சீமானை திமுக அப்போதே கைது செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.