
கர்நாடக மாவட்டத்தில் காவிரி நீர் பிடிப்புகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அணைகளில் இருந்து காவிரி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுவதால் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இதனால அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நாமக்கல் சென்றுள்ளார். அவர் அங்கு குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும் இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, பெட்ஷீட் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.