நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்து விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்பு புகார்கள் தெரிவித்து வருகிறார். இவருக்கு ஆதரவாக வீரலட்சுமி என்பவர் இருக்கிறார். இவர் அவ்வப்போது விஜயலட்சுமிக்கு ஆதரவு கொடுத்து சீமானை விமர்சிப்பார். இந்நிலையில் விஜயலட்சுமி கணவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது இவருடைய கணவர் பெயர் பூவை கணேசன் (43).

இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நாலே அடியில் சீமானை நாக் அவுட்‌ செய்து விடுவேன் என்று பேசி இருந்தார். இந்நிலையில் பூவை கணேசனுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு இன்று பக்கத்து வீட்டுக்காரர் அவரின் மண்டையை உடைத்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.