
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆன தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி 220 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலையில் இருக்கும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதேபோன்று நிதீஷ் குமாருக்கும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.