கேரள மாநிலத்தில் வனப்பகுதி அதிகமாக உள்ளது. பல பகுதிகளில் வனப்பகுதி அருகே இருப்பதால் அடிக்கடி காட்டுயானை உள்ள வனவிலங்குகள் வரும். அந்த வகையில் சாலையோரம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பள்ளி செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தனர். அப்போது திடீரென அவ்ழியாக ஒரு காட்டு யானை வந்தது.

அந்த யானை மாணவர்களை தாக்க முயற்சி செய்தது. இந்த சம்பவம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேடு என்ற பகுதியில் நடந்தது. மாணவர்களை யானை தாக்க வந்த நிலையில் அவர்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். உடனடியாக பகுதியில் இருந்த மக்கள் சத்தம் போட்டதால் யானை அங்குள்ள ஒரு தோப்புக்குள் புகுந்து விட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.