
தெலங்கானாவின் பத்ராத்ரி-கோதகுடேம் மாவட்டம் தும்முகுடெம் மண்டலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சுதாகர், கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் தும்மாலா நாகேஸ்வர ராவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார். இந்த பதற்றமான தருணத்தில் அருகில் இருந்த பத்ராசலம் எம்எல்ஏ டாக்டர் தெல்லம் வெங்கட ராவ் துரிதமாக செயல்பட்டு, உடனடியாக CPR செய்தார்.
భద్రాచలంలో కాంగ్రెస్ నేతకు గుండెపోటు – సీపీఆర్ చేసిన రక్షించిన ఎమ్మెల్యే.
భద్రాచలంలో కాంగ్రెస్ నేత గుండెపోటుతో కుప్పకూలగా, అపస్మారక స్థితిలోకి వెళ్లాడు.
తక్షణమే స్పందించిన స్థానిక ఎమ్మెల్యే తెల్లం వెంకట్రావు సీపీఆర్ చేసి ప్రాణాలు రక్షించారు. #CPR #Bhadrachalam pic.twitter.com/xiMp3W31Cd
— greatandhra (@greatandhranews) April 4, 2025
உடனடியாக அவர் மயக்க நிலையில் இருந்து தெளிந்த நிலையில் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் எம்எல்ஏ வெங்கடராவ் துரிதமாக செயல்பட்டு சுதாகரின் உயிரை காத்து நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் அந்த எம்எல்ஏவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.