
ரஷ்யாவின் தாகெஸ்தானின் வடக்கு காகசஸ் என்ற பகுதியில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு வாரந்தோறும் பிராத்தனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த தேவாலயத்திற்குள் நேற்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியோடு அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஒரு மத குருவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமின்றி தேவாலயத்திற்குள் வந்த பொதுமக்களும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.