திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஓட்டுநர் ஓடும் பேருந்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நடத்துனர் சாமர்த்தியமாக செயல்பட்டு கையால் பிரேக் அழுத்தி பேருந்தை நிறுத்தினார்.

அவர் விரைந்து செயல்பட்டதால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஓட்டுநரை பரிசோதனை செய்து பார்த்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.