
தஞ்சாவூர் மாவட்டம் ரெங்கபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அ.தி.மு.க.வில் முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்தவர். நேற்று இரவில் மர்ம நபர்கள் சிலர் பாலமுருகனின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசியுள்ளனர்.
அதனால் வீட்டின் மேற்கூரை, சுவர் போன்றவை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.