
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் சாப்ரௌலி பகுதியிலுள்ள லம்ப் கிராமத்தில், 17 வயது உணவக ஊழியர் மனோஜ் பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். தந்தா ரமாலா சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றி வந்த மனோஜ், நேற்று இரவு உணவக அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு அவரைக் கடித்தது.
உடனடியாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மனோஜ் வழியிலேயே உயிரிழந்தார். மனோஜ் நான்கு உடன்பிறப்புகளில் இளையவர். அவரது தந்தை சில வருடங்களுக்கு முன்பு காலமான நிலையில், குடும்ப பொறுப்புகளை அவர் தானாகவே மேற்கொண்டு வந்தார்.
बागपत: सो रहें किशोर को सांप के डंसने से मौत सीसीटीवी में कैद हुआ हादसा#snake #baghpat #UttarPradesh #Viralvideo pic.twitter.com/ioO3zNBtds
— Webdunia Hindi (@WebduniaHindi) May 18, 2025
மூத்த சகோதரர் பெரும்பாலும் கிராமத்திற்கு வெளியே வேலை பார்த்ததால், மனோஜ் தான் குடும்பத்திற்கு முதன்மை ஆதரவாக இருந்தார். அவரது இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மனோஜை பாம்பு கடித்த சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.