
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறுமனை அருகே ஜெய்சிங் என்பவர் தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்றபோது ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.
இதனால் படுகாயமடைந்த தந்தை மற்றும் மகள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.