சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய திடுக்கிடும் வீடியோவில், ஒரு சிறுமி பிசியான சாலையில் தவறான திசையில் பைக் ஓட்டும் காட்சி வைரலாகியுள்ளது. அந்த வீடியோ இதுவரை 800,000-க்கும் அதிகமான பார்வைகளையும், 5,500-க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. முதலில், சிறுமி சாலையின் ஓரமாக பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தாலும், சில வினாடிகளுக்குப் பிறகு அவர்  நேராக போக்குவரத்து அதிகமாக உள்ள சாலையின் நடுவில் செல்கிறார். பல வாகனங்கள் சிறுமியின் அருகே மிக ஆபத்தான முறையில் செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, எந்தவொரு விபத்தும் ஏற்படவில்லை. வீடியோவின் இறுதியில், ஒரு போக்குவரத்து காவலர் விரைந்து சென்று, சிறுமியையும், பைக்கையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்துகிறார். இந்த நிலையில் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சாலையில் குழந்தைகள் அட்டகாசம் செய்வதை பெற்றோர் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். சாலை பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் கண்காணிப்பு பற்றிய முக்கியமான விவாதங்களை மீண்டும் இந்த வீடியோ கிளப்பியுள்ளது.