சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நகையை காணவில்லை என புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் கூறியதாவது, அந்த குடும்பம் திருமணம் மோசடி செய்து 3, 4 திருமணம் செய்து ஒரே நாளில் ஓடி போனவர்கள். ஓடிப்போன மறுநாள் வரதட்சணை கொடுமை வழக்கு கொடுத்து அந்த குடும்பத்தையே சின்னாப்பின்னம் ஆக்கியிருக்கிறார்கள்.

சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து திருமணம் செய்து மாப்பிள்ளை குடும்பத்தினரை மிரட்டி பணம் வாங்குவது தான் அவர்களது வழக்கம். திருமணமான அன்று நிகிதா ஓடி விடுவார். அந்த குடும்பமே மோசடி குடும்பம் தான். நிகிதாவின் அப்பா சப் கலெக்டர். அம்மா அரசு ஊழியர் அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு அதிகமாக இருந்தது.

இவர்கள் செய்த மோசடிக்கு 2004 ஆம் ஆண்டு எஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆக பணியாற்றியவர்கள் உறுதுணையாக இருந்தனர். அஜித் குமார் வழக்கில் நகையை திருடு போனதாக புகார் அளித்துள்ளனர். அப்படி ஒரு நகை சம்பவமே நடைபெற்ற இருக்க வாய்ப்பில்லை. அந்த குடும்பம் மீண்டும் ஒரு புதிய சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதற்கு இவர்கள் தான் காரணம் என பரபரப்பு புகார் அளித்துள்ளார்.