
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பவித்ரா. மாடலிங் துறையில் இருந்து திரைப்பட வாய்ப்புக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரின் கனவு உண்மையில் நிஜமானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய பிறகு இவருக்கு நாய் சேகர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் பவித்ரா லட்சுமி தனது தாய் மறைவு குறித்து இன்ஸ்டால் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “நீங்கள் ஒரு சூப்பர்மாம். நீங்கள் என்னை விட்டு பிரிந்து ஒரு வாரம் ஆகிறது. இன்னும் உங்கள் நினைவுகள் என் தலைக்குள் சுற்றி கொண்டு உள்ளது. நீங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் போக வேண்டும்? கடந்த ஐந்து வருடமாக நீங்கள் பட்ட வழியும் வேதனையும் இனி உங்களுடன் இருக்காது என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க