
பஞ்சாப் மாநிலம் பர்னாலா என்ற மாவட்டத்தில் ராம ராஜ்ஜிய காலணியில் குல்பீர் மன் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் பல்வந்த் கவுர் (85), மகள் நிம்ரத் கவுர்(21) . இந்த நிலையில் குல்பீர் மகள் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் குல்பீர், உரிமம் பெற்ற கை துப்பாக்கியை கொண்டு அவருடைய மகளை முதலில் சுட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு தனது ஆத்திரம் அடங்காமல் அவருடைய தாய் மற்றும் வளர்ப்பு நாயையும் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குல்பீர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.