
சமீபத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உயிர் தப்பி பிழைத்தவர்களில் சிலர் தாங்கள் அனுபவித்த வன்முறையின் கொடூரத்தை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அதன்படி கடந்த சனிக்கிழமை ஹமாஸ் போராளிகள் வெறித்தனமாக சென்று காசா எல்லையில் ரோட்டெம் மத்யாஸ் என்ற குடும்பத்தை தாக்கினார். அப்போது வயிற்றில் குண்டு காயத்துடன் கிடந்த மதயாஸ் ஏற்கனவே உயிரிழந்த தன்னுடைய தாயார் டெபி சடலத்தின் கீழ் மறைந்து கொண்டு தன் உயிரை காப்பாற்றியதாக கூறினார். இந்த சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.