விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (40) என்பவருடன் சத்யாவிற்கு நட்பு உருவானது. விஜயகுமாருக்கு திருமணமாகி, அலுமேலு என்ற மனைவியுடன், ஒரு மகளும் உள்ளனர். ஆரம்பத்தில் நட்பாக இருந்த இந்த உறவு, விரைவில் காதலாக மாறி, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சமீபத்தில் சத்யா கர்ப்பமாகியதைத் தொடர்ந்து, விஜயகுமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் இதை மறுத்த விஜயகுமார், சத்யாவை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சத்யா நேரடியாக ரிஷிவந்தியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சத்யாவின் புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.