
இங்கிலாந்து நாட்டின் தன் பாலின இணையான கிரிக்கெட் வீராங்கனைகள் ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்டும், கேத்ரின் ஸ்கைவர் பிரண்டும் 2022 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். நாட் ஸ்கைவர் மகளிர் கிரிக்கெட்டில் தொடர் முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில் இந்தியாவின் நடைபெற்ற மகளிர் பிரீமியம் லீக் போட்டியில் தொடர் நாயகியாக ஜொலித்து வந்தார். அதே சமயம் இங்கிலாந்து அணிக்காக ஒட்டுமொத்தமாக 335 விக்கெட் வீழ்த்தியவர்.
View this post on Instagram
கேத்தரின் தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இருவரில் 39 வயதான கேத்தரின் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து முடிவெடுத்து செயற்கை கருத்தரிப்பு முறை சிகிச்சை மேற்கொண்டு கர்ப்பமானார். இந்த நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோர் ஆன மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். கிரிக்கெட் வீராங்கனைகளும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.