
ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்படியாக இந்தியாவிடம் இருந்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
அதில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகளின் 9 தாக்குதல் முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த ஆபரேஷனுக்கு ட்ரோன் மிகவும் உதவியாக இருந்ததால் தாக்குதலுக்குப் பின்பு இந்திய ராணுவம் ட்ரோன் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதுவரை ஏறக்குறைய 300 கோடிக்கும் மேலாக ட்ரோன் வாங்குவதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
அதனை சோலார் டிபன்ஸ் அண்ட் ஏரோ ஸ்பேஸ் என்ற நிறுவனத்திடம் ரூபாய் 158 கோடிக்கு இந்திய ராணுவம் டிரோன் ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்துமே இரவிலும் இலக்கினை துல்லியமாக காட்டக்கூடிய திறன் பெற்றவை.
மேலும் ரூபாய் 137 கோடிக்கு ஐடியா ஃபோர்ஜ் டெக்னாலஜி என்ற நிறுவனத்திடமும் ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதில் கண்காணிப்பு மற்றும் செங்குத்தாக கிளம்பி தரையிறங்கும் ஆற்றல் கொண்ட அதிக தூரம் பாயும் திறனுடைய ட்ரோன்களை தயார் செய்யுமாறு இந்திய ராணுவம் கூறியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ட்ரோன் சந்தை மதிப்பு 23 ஆயிரத்து 048 கோடி ரூபாய் என்று அளவில் இருந்த நிலையில் வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் 7 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலுக்கு பின்பு ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு கருவிகளை வாங்குவதில் இந்திய ராணுவம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.