
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதாக இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில் அவர்கள் 21 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இந்த கேள்விகளுக்கு தமிழக வெற்றி கழக கட்சியின் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இன்று புஸ்ஸி ஆனந்த் 21 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறையினரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் காவல்துறைனருக்கு எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கி விட்டோம். அவர்கள் 2 அல்லது 3 நாட்களில் கலந்தாய்வு செய்த பிறகு முடிவை சொல்வதாக தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் அனுமதி கிடைத்தவுடன் முதல் மாநாடு குறித்த தேதியை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறியுள்ளார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காத என்ற எதிர்பார்ப்பு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.