
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கீழ்வேளூர், பெருங்கடம்பனுர் மற்றும் ஓர்குடி ஆகிய கிராமங்களில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் பெருங்கடம்பனுர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே தமிழக வெற்றி கழகத்தினர் கொடியேற்றுவதற்காக சென்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடிக்கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கு இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென மோதலாக மாறியது. இந்த சம்பவத்தில் துரை, இளங்கோ மற்றும் மாரிமுத்து ஆகிய மூவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தமிழக வெற்றி கழகத்தினரை வேறு இடத்தில் கொடியேற்றுமாறு கூறினார். மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இருதரப்பினரும் பிரச்சனையை விட்டு கலைந்து சென்ற நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் வேறு ஒரு இடத்தில் கொடிக்கம்பம் நட்டனர்.