
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் நிலையில் சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு மாநாட்டில் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அரசாங்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அதன்பிறகு இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு வரவேண்டும் என்று கூறிய கருத்துக்கு விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய அவர்கள் ஒருவேளை இதை செய்யாவிடில் நடிகர் விஜயின் வீடு முற்றுகை இடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பதவி சுகத்துக்காக இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்க நினைக்கும் அந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.