
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்த நாளை தமிழக வெற்றி கழக தொண்டர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விஜயை வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டது.
அந்த வகையில் சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனர் சரிந்து விழுந்து ஒரு முதியவர் காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சதீஷ், சந்தோஷ், ஜெகன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.