
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தற்போது நடிகர் விஜயின் முதல் மாநாடு வெற்றி பெற மனதார வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு நடிகர் விஜய் சமூக நீதியை பாதையில் பயணிப்பதாகவும் அவர் தற்போது செல்லும் பாதை மிகவும் சரியானது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமூக நீதி பார்வை கொண்டவராக சரியான திசையில் பயணிக்க தொடங்கியுள்ளதால் அவருடைய மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் நடிகர் விஜயின் முதல் மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் பலரும் முதல் மாநாட்டை உற்று நோக்கி கவனித்து வருகிறது. நடிகர் விஜய் முதல் மாநாட்டில் தன் கொள்கைகள் மற்றும் 2026 தேர்தலில் வெற்றிக்கான வழி கூட்டணி குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதால் முதல் மாநாடு மீதான எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.