தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் என்ற நடைபெற்ற நிலையில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கடந்த 27ஆம் தேதி முதல் மாநாடு நடைபெற்ற நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் நடிகர் விஜயின் கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார். குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நடிகர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதேசமயம் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டாம் எனவும் வருகிற சட்டமன்ற தேர்தலை தனித்து சந்திக்கலாம் எனவும் நிர்வாகிகள் விஜயிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்களுடைய தொகுதியில் தலைவர் போட்டியிட வேண்டும் என்று விரும்பும் நிலையில் அப்படித்தான் ஆலோசனை கூட்டத்தின் போதும் ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் விஜய் மதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று போஸ்டர்கள் அடித்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மதுரை மாநகரில் ஒட்டி இருந்தனர். மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பும் இருந்த அளவில் இருக்கிறது.