நீட் தேர்வு பிரச்னைகளுக்கு அதனை ரத்து செய்வது தான் ஒரே தீர்வு என்று விஜய் நேற்று விருது விழாவில் பேசியிருக்கிறார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது தான் ஒரே தீர்வு. மேலும் தற்காலிக தீர்வாக சிறப்பு பொதுப் பட்டியல் உருவாக்கி கல்வியை அதில் சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன்மூலம். மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும்  பேசினார்.

இந்நிலையில் நீட் விலக்கு கோரி தவெக தலைவர் விஜய் பேசியது வரவேற்கத்தக்கது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நீட் தேர்வு வேண்டாம், மாநிலப் பட்டியலுக்கு கல்வி வரவேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என்ற அவர், நல்ல விஷயத்திற்காக விஜய் மட்டுமல்ல, யார் குரல் கொடுத்தால் நல்லதுதான் என்றார். மேலும், நீட் தேர்வு வர காரணமே காங்கிரசும், திமுகவும்தான் என விமர்சித்துள்ளார்.