பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அரசியல் வட்டாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. வருகிற 2026 ஆம் ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் அபிராமி ஹீரோயினாக நடித்தார்.

இந்த நிலையில் அபிராமி விஜய் கட்சி கொடியுடன் கூடிய காரில் வந்து இறங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் பிரபுதேவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஜாலியோ ஜிம்கானா படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நடிகை அபிராமி வந்தார். அவர் விஜய் போட்டோ தமிழக வெற்றி கழக கொடியுடன் கூடிய காரில் வந்து இறங்கினார். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் சேர்ந்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.