
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மாநாட்டில் கட்சியின் விளக்க பாடல், கொடிக்கான விளக்க பாடல் மற்றும் கொள்கை பாடல் போன்றவற்றினை அறிவித்தார். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெயர் விளக்கத்திற்கான பாடல், கொடி விளக்கத்திற்கான பாடல் மற்றும் கொள்கை தலைவர்களுக்கான விளக்க பாடல் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பாடல்களில் விஜய் தன் சொந்த குரலில் பாடியுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரை கொள்கை தலைவர்களாக அறிவித்தார்.
திராவிடமும் தேசியமும் இரு கண்கள் என்று அறிவித்த நிலையில் மதச் சார்பற்ற சமூக நீதிக் கொள்கையை கட்சியின் கொள்கை என்றும் கூறினார். அதோடு கட்சி கொடிக்கான விளக்கத்தையும் கொடுத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசிய நிலையில் திமுகவின் நேரடியாகவே அரசியல் எதிரி என்று அறிவித்துவிட்டார். அதோடு கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அதிரடியாக அறிவித்து கூட்டணிக்காக அழைப்பும் விடுத்துள்ளார். மேலும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக அவருடைய அரசியல் வருகை மிகப்பெரிய திருப்புமணியை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம்
பெயர் விளக்கம் – https://t.co/Qz1Lcpbfx0
கொடி விளக்கம் – https://t.co/XTwnNMu4dN
கொள்கைத் தலைவர்கள் – https://t.co/AzNqOnydOX#TamilagaVettriKazhagam#ThalaivarVijay #VettriKolgaiThiruvizha#TVKVijay
— TVK Vijay (@tvkvijayhq) October 29, 2024