தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழக விதிகளின்படி தமிழக வெற்றிக் கழக தலைவரே தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் தலைவர் ஆவார். இதன்படி பின்வரும் தோழர்களே கழக தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்கிறேன்.

உறுப்பினர் 1-திரு என்.ஆனந்த் கழக பொதுச்செயலாள,ர் உறுப்பினர் 2-திருமதி சி.விஜயலட்சுமி, மாநில செயலாளர், உறுப்பினர் சேர்க்கை அணி. இந்த குழுவானது கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் கழக கட்டுப்பாட்டை மீறி கொள்கைகள் கோட்பாடுகள் குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்குழுவிற்கு கழக நிர்வாகிகளும், தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதோ முழு அறிக்கை…