
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சத்யராஜ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் நிலையில் பாலிவுட் சினிமாவிலும் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவீர்களா என்று கேள்விஎழுப்பினர். அதற்கு அவர் எனக்கு தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து அழைப்பு வந்தால் நான் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வேண்டும் என்று கேட்பேன். எனக்கு கண்டிப்பாக அந்த பதவி கிடைக்கும். அந்த பதவி கிடைத்தால் இணையலாம் என்று தெரிவித்தார்.
மேலும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற முதல் மாநாட்டில் தன்னுடைய கட்சி கொள்கைகளை அறிவித்தார். அவருடைய கட்சி கொள்கைகள் திமுகவின் கொள்கைகளை ஒத்திருப்பது போன்று பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். அதன் பிறகு கட்சியின் கொள்கைகளை விஜய் வெளியிட்டதில் இருந்து அவர் மீது விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் கொள்கை பரப்பு செயலாளர் ஆக தமிழக வெற்றி கழகத்தில் பதவி கொடுத்தால் இணையலாம் என்று தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.