
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சீமானை கடுமையாக கூலிக்காரன் என்று விமர்சித்தார். இது பற்றி அவர் கூறியதாவது, திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் நிலையில் அதை உடைக்க பலர் முயற்சிக்கிறார்கள். பெரியார் பலமுறை மக்களுக்காக போராடி சிறை சென்றபோதிலும் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதே கிடையாது. தண்டனையை கொடுங்கள் நான் செய்தது தவறு கிடையாது என்று கர்ஜித்தவர் பெரியார். பணம் தந்தாலும் தராவிட்டாலும் புதிய கல்விக் கொள்கையில் கையெழுத்து போட முடியாது என்று கூறியவர் முதல்வர் ஸ்டாலின்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியான நிகரான பெயர் செல்லக்கூடிய தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. அதிமுகவினர் வளைந்து கொடுத்தே பழகிவிட்டனர். தளபதி ஸ்டாலினுக்கு பெயர் சொல்லும் படியாக ஒரு நல்ல எதிரி கூட இல்லை. மாறாக தமிழர்களையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தி பெரியாரை இழிவுபடுத்தி பேசுகிற சில கூலிக்காரர்களை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது என்று கூறினார். மேலும் ஆளுநர் ஒரு ஆளுநர் போன்று செயல்படாமல் அரசியல்வாதி போல் செயல்படுகிறார் என்று கூறினார்.