
லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரிக்கக்கூடிய இந்த இடத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் லியோ படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடலை தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
அதேநேரம் இப்பாடல் போதைப்பொருளை ஊக்கவிக்கும் விதமாக இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அதுமட்டுமின்றி இப்பாடலை தடை செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் “நா ரெடி” பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் இணைக்கப்பட்டு உள்ளது.