தோனியின் மனைவி சாக்ஷி  தன்னுடைய தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக லாட்ஸ் கெட் மேரீட் என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு  ஜோடியாக நடிகை இவானா  நடிக்கிறார். மேலும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நதியா உட்பட பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் யோகி பாபுவும், தோனியும் சேர்ந்து கேக் வெட்டினார்கள். ஆனால் யோகி பாபு வெட்டுவதற்குள் தோனி ஒரு கேக் பீஸ் எடுத்து சாப்பிட்டு விட்டார். உடனே யோகி பாபு தோனியை பார்த்து லுக் விடுகிறார். இதைப்பார்த்த தோனி கியூட்டாக சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசனங்களும் தல தல தான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.